ராமதாஸ் VS ஆற்காட்டார் = ஐயோ ஐயோ ஐயோ!
இப்ப நடந்து கொண்டிருக்கும் ராமதாஸ்-ஆற்காட்டார் மோதல், தீப்பொறி நிலையிலிருந்து காட்டுத்தீ அளவுக்கு போய் விட்டது !!! எப்போதும் போல இதை தொடங்கி வைத்தவர் மருத்துவர் ஐயா தான். மின்சாரப் பற்றாக்குறையை முன் வைத்து தமிழக அரசையும், அமைச்சரையும் ராமதாஸ் ஒரு பிடி பிடித்ததோடு நில்லாமல், கடலூர் அருகில் உள்ள தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய கிராமங்களில், மின் உற்பத்திக்காக தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விவசாய நிலம் என்றும் குற்றம் சாட்டினார்.
இதுவரை மருத்துவரை சகித்துக் கொண்ட திமுக, திருப்பித் தாக்க ஆற்காட்டாருக்கு அனுமதி கொடுத்திருக்கும் என்பது என் யூகம் :) அரசின் அனைத்து நலத் திட்டங்களுக்கும், ஏதாவது காரணம் காட்டி, ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும், அவரின் போக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதே மருத்துவரின் எண்ணம் என்றும், ஆனால் அவரது ஆசை நிறைவேறாது என்றும் மருத்துவர் ஐயாவை தைரியமாக ஒரு வாங்கு வாங்கி விட்டார் ! அவருக்கு பாராட்டுக்கள் ;-)
மேலும், ராமதாஸ் சொல்வது போல் அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விளை நிலமே அல்ல என்றும், டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு காட்டுமிராண்டி காலத்தை போல் மாற வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்!
அதோடு நில்லாமல், கொனேரிக்குப்பம் அருகில், வன்னியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பா.ம.க வாங்கியிருக்கும் நிலங்களிலும், விளை நிலம் இருப்பதையும், பொறம்போக்கு நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். திமுக தரப்பிலிருந்து இப்படிப்பட்ட பலத்த எதிர்ப்பை எதிர்பார்க்காத மருத்துவர், பொங்கியெழுந்து விட்டார். ஆற்காட்டார் (தான் கூறியதை) ஆதாரங்களோடு நிரூபித்தால், ராமதாஸ் தான் அரசியலை விட்டே நிரந்தரமாக விலகுவதாக ஒரு சவால் விட்டார் ! என்ன, தமிழ் சினிமா மாதிரி இருக்கா ? ;-)
தொடர்ந்து ஆற்காட்டாரும், சில ஆவணங்களில் உள்ள தகவல்களை முன் வைத்து, தான் எடுத்துரைத்த குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிரூபித்து விட்டதாகவும், தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருப்பதாகவும், சவால் குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை டாக்டர் ராமதாசுக்கே விட்டு விடுவதாகவும் சற்று நீளமான பன்ச் டயலாக் ஒன்று விட்டார் !
மருத்துவர் சும்மா இருப்பாரா ? ஏழை எளிய நலிந்த வன்னிய மாணவர்களுக்காக, வன்னியர் கல்வி அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை, வன்னிய சமுதாயம் ஒரு கோயிலாகக் கருதுவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதை வைத்து தன்னை 'வளர்ச்சிக்கு எதிரி' என்று கருதினால் அது குறித்து தனக்குக் கவலையில்லை என்று (எதிர்பார்த்தது போலவே) மருத்துவர் பதில் முழக்கமிட்டார் !!! அதோடு, அமைச்சர் வீராசாமியின் வீண்பழி ஒன்றரை கோடி வன்னிய மக்களின் மனதை மேலும் புண்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை (ஒரு வழியா மெயின் மேட்டருக்கு வந்தாச்சில்லையா ;-))) என்று மனம் கலங்கினார் !
"தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கூறு போட்டு விற்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து விற்கப்படுகின்றன. இப்படி ஏரி புறம்போக்கு நிலங்களை கூறு போட்டு விற்ற குபேரர்கள் யார் என்பது ஊருக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறிய ராமதாஸ், அவர்களை தக்க சமயத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் விடுத்த இறுதி எச்சரிக்கையோடு, இந்த மோதல், சாரி, யுத்தம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது !
டாக்டர் ஐயா இன்னும் நிறையப் பேசினார், எனக்கு தட்டச்ச பொறுமையில்லை :)
"நாட்டு மக்களை ஏமாற்றுகிறவர்கள் யார்? உத்தமர்கள் போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பதை அப்போது மக்கள் அறியத்தான் போகிறார்கள்" என்று முத்தாய்ப்பாக மருத்துவர் கூறியது மிகச் சரியான கூற்றே !
எல்லாருக்கும் (மக்களுக்கு) எல்லாரைப் பற்றியும் எல்லாம் தெரியும் ! அதனால், ராமதாஸ் மற்றும் ஆற்காட்டார் அறிக்கைகளை/பேச்சை வைத்தெல்லாம் மக்கள் எந்த முடிவுக்கும் வரப்போவதில்லை என்பதும், இந்த மோதலில் இரு தரப்பினருமே அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்பதும் நிதர்சனம் ;-)
எ.அ.பாலா
14 மறுமொழிகள்:
Test comment :)
//ஆற்காட்டார் (தான் கூறியதை) ஆதாரங்களோடு நிரூபித்தால், ராமதாஸ் தான் அரசியலை விட்டே நிரந்தரமாக விலகுவதாக ஒரு சவால் விட்டார் ! என்ன, தமிழ் சினிமா மாதிரி இருக்கா ? ;-)//
தமிழ்மணத்தை விட்டு விலகப்போவதாக ஓசையுடன் அழுது கொண்டே போய் பிறகு போன மச்சான் திரும்பிவந்தான் கதையாக மறுபடி வந்த ஒரு பதிவர்தான் நினைவுக்கு வருகிறார்.
அதே போல ராமதாசு அவர்களும் பல ஃபோன்கால்கள் தனக்கு வந்து தன்னை திர்ம்ப வரச்சொன்னதாகக் கூறி அரசியலுக்கு திரும்ப வந்து விடுவார். :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்
i wish all politicians fight like this . Then everybody will be out with everyone else's illegal activities.
-aathirai
Oor rendu patta koothadikku vettai thaan.
டோண்டு சார்,
கருத்துக்கு நன்றி :)
சிறில் அலெக்ஸ்,
வாங்க, பார்த்து நாளாச்சு :) நன்றி.
ஆதிரை,
நீங்க சொல்றது தான் ரைட் ;-) நன்றி.
இந்த அறிக்கைப் போரில் இரு தரப்பிலிருந்தும் தலா 3-4 அறிக்கைகள் வெளி வந்துள்ளன. வாசகர்களின் நேரமின்மை என்ற நெருக்கடியை மனதில் வைத்து, அறிக்கைகளின் முக்கியக் கருத்துகளை மட்டும் தொகுத்து பிரச்சினையின் சாராம்சத்தை சாறாக பிழிந்து தந்துள்ளேன் :)))))
அறிக்கைகளின் முழு வீரியத்தை உணர்வதற்கு இட்லிவடையின் வலைப்பதிவுக்குச் சென்று பதிவை கண்டுபிடித்து வாசிக்கவும் ;-))
//Oor rendu patta koothadikku vettai thaan.
//
என்னடா, காமெடியன் யாரையும் காணோமேன்னு நினைச்சா, கரெக்டா ஜோ ஆஜர் ;-)
நல்ல தொகுப்பு பாலா.. இதனால மக்களுக்கு நல்லது எதுவும் கண்டிப்பா நடக்காது என்ன கொஞ்சம் டைம் பாஸ் பேப்பர் கொஞ்சம் நல்லா விக்கும் அவ்வுளவு தான்.
ஸ்ஸ்ஸ்ஸ்யப்ப்ப் ஒரு கமெண்டு போடுறதுக்கு நான் படுற பாடு இருக்கே முடியலை. :)))
//Oor rendu patta koothadikku vettai thaan.//
இங்க கூத்தாடிங்க அல்லவா ரெண்டு படறாங்க. அப்ப ஊருக்குத்தானே கொண்டாட்டம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த கண்கள் படம் உங்கள் தலைப்போடு தமிழ்மணத்தில் தெரிவது எப்படி. படத்தை எப்படி இனைக்க வேண்டும். தெரியபடுத்தவும், நன்றி
பல ஏக்கர் நிலம் கல்விக்காக பயன் பட போகும் பொழுது அதில் சில ஏக்கர் விவசாய நிலம் இருப்பதை வைத்து கூச்சல் போடுகிறார் ஆற்காட்டார் என்று ராமதாஸ் சப்பை கட்டு கட்டுகிறார்.
பல லட்சம் ஏக்கர் நிலம் துனை நகரத்துக்கும் அல்லது விமான நிலையத்துக்கும் கையகபடுத்தும் பொழுது சில கிராமங்கள் பாதிக்க படுவதும் இயல்புதானே!!!
என்னா அது தன் குடும்பத்துக்கு என்றால் ஒரு நீதி தமிழ் மக்களுக்கு என்றால் ஒரு நீதி.
அரசியலில் சகஜம்மப்பா என்ற கவுண்டமணி டயலாக்தான் நினைவுக்கு வருகிறது!!
பனிமலர்,
தங்கள் பிளாக்கர் புரொபைலை எடிட் செய்யும்போது, தேவையான படத்தை இணைக்க முடியும்.
சந்தோஷ், குசும்பன்,
கருத்துக்கு நன்றி.
டோண்டு சார்,
கருத்துக்கு நன்றி :)
//தமிழ்மணத்தை விட்டு விலகப்போவதாக ஓசையுடன் அழுது கொண்டே போய் பிறகு போன மச்சான் திரும்பிவந்தான் கதையாக மறுபடி வந்த ஒரு பதிவர்தான் நினைவுக்கு வருகிறார்//
டோண்டு அய்யா,
ஓசையுடன் அழுது கொண்டு போனவரை விட, வீராவேசமா சபதம் போட்டுவிட்டு ஓடிப்போய் ரெண்டே நாளில் மதுரை மோனாலிசா பாசத்தோடு அழைத்ததா சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்து காமெடி செய்தவர் நம்ம வலையுலக ஓ என் ஜி ஸி வெளியே மிதக்கும் அய்யா தான்.
பாலா
பாலா,
ஏதாவது ரவுசு பண்ணி வம்பு வளர்க்கறதே உங்களுக்கு வேலையாப் போச்சு :))))
Post a Comment